சொத்தை பறித்து பெற்றோரை விரட்டிய மகன் மருமகளுக்கு ஷாக்..! சார் ஆட்சியரின் சம்பவம்

0 4721

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே வீடு மற்றும் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய  மகனிடம் இருந்து சொத்துக்களை மீண்டும் பெற்றோருக்கு திருப்பி வாங்கி கொடுத்த பத்மநாபபுரம் சார் ஆட்சியருக்கு பாராட்டு குவிகின்றது.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை, இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சதீஷ், அனீஷ் என்ற இரு மகன்கள் ,இவர்களில் மூத்த மகன் சதீஷ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டாவது மகன் அனீஷ்க்கு திருமணம் செய்து வைத்ததோடு தங்கள் பெயரில் இருந்த வீடு மற்றும் நிலத்தையும் அவர் பெயரில் தான செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கூலி வேலை பார்த்து வந்த நீலகண்ட பிள்ளை முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிய நிலையில் மனைவி தங்கமும் புற்று நோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவர்களை மகன் அனீஷ் ,மருமகள் பிரதீபா சரிவர கவனிக்காமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது இதனால் வயதான பெற்றோர் இருவரும் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

வயதான காலத்தில் தங்கள் வாரிசால் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதில் தனது மகனிடம் இருந்து பராமரிப்பு கிடைக்க பெறாத காரணத்தினாலும் புற்றுநோய் செலவினங்களுக்காகவும், மகனுக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்யும் படி மனுவில் தெரிவித்தார்

இதனையடுத்து அவர்களது மகன் மற்றும் மரு மகளிடம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தீர்பாயத்தில் சார் ஆட்சியர் கௌஷிக் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதிப் படுத்தப்பட்டது.

இதையடுத்து நீலகண்ட பிள்ளை தனது வீடு மற்றும் நிலத்தை மகன் அனீஷ் பெயருக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்ட சார் ஆட்சியர் கவுசிக், அதன் உத்தரவு நகலை வழங்கியதோடு, அவர்களுக்கு மகன் அனீஷ் இடையூறு ஏற்படுத்தினால் காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments